அதன் அடிப்படையில் உரிமம் பெற்ற, பெறாத தொழிற்சாலைகளை கண்காணிக்க உயர்மட்ட ஆய்வுக் குழு அமைத்து தணிக்கை செய்து, விதிமுறை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் பட்டாசு ஆலைகளை கண்காணிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலர், தீயணைப்பு மற்றும் தொழிற்சாலை துறை ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் தணிக்கை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது.