அதனால் நூலகத்துறையின் சார்பில் நூலகர் வாசகர் வட்டத்தை உருவாக்கி மாணவ, மாணவிகள் மத்தியிலும், பிறரிடத்திலும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, இங்கு வந்துள்ள நீங்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் நாள்தோறும் 50 பக்கங்களாவது படிப்போம் என்று உறுதியேற்றுக் கொள்வது அவசியம். ஏனென்றால், வருங்காலம் போட்டிகள் நிறைந்த உலகமாகவே இருக்கும். அதனால், மாணவர்களாகிய நீங்கள் சீரிய சிந்தனையோடு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.அகிலந்திய அளவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. அதனால், எந்த நோக்கத்திற்காக மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியை முதல்வர் வழங்கினாரோ, அந்த வகையில் உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். அதையடுத்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மொத்தம் 586 பேருக்கு வழங்கினார்.