/

மூதாட்டி கொலை வழக்கு: இளைஞர்கள் 3 பேருக்கு ஆயுள்

மூதாட்டியை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வாணியம்பாடி இளைஞர்கள் மூவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:44 pm

ஜெபலின்ஜான்

மூதாட்டியை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வாணியம்பாடி இளைஞர்கள் மூவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ராம்நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி (70). ஏற்கெனவே கணவரை இழந்த இவர், தனது மருமகன் கந்தசாமி, மகள் பானுமதி ஆகியோருடன் ராம்நகரில் வசித்து வந்தார். கந்தசாமி மளிகை கடை நடத்தி வருகிறார்.

 கந்தசாமியும், பானுமதியும் கடைக்கு சென்றநேரத்தில் வீட்டுக்குள் புகுந்த சிலர் முத்துலட்சுமியை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு ரூ.63,000 மதிப்புள்ள தங்க நகை, செல்போன், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டனர். இச்சம்பவம் 18.12.2012-ல் நடந்தது.

 இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெருந்துறை போலீஸார், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காய் பகுதியை சேர்ந்த ரஜினி (24), ராமகிருஷ்ணன் (24), கலையரசன் (25) ஆகியோரை கைது செய்தனர்.

 இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை ஈரோடு மாவட்ட 2-வது கூடுதல்ர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சர்வமங்கலம், குற்றஞ்சாட்டப்பட்ட ரஜினி, ராமகிருஷ்ணன், கலையரசன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 அரசுத் தரப்பில் கூடுதல் வழக்குரைஞர் துரைசக்திவேல் ஆஜரானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.