ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

செங்கோட்டை அருகே 50 பவுன் நகை கொள்ளை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி செங்கோட்டை சாலையில் உள்ள இலஞ்சி கிராமத்தில் நேற்று இரவு ஒரு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 50 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம்

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:37 pm

பா.​ பிரகாஷ்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி செங்கோட்டை சாலையில் உள்ள இலஞ்சி கிராமத்தில் நேற்று இரவு ஒரு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 50 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றனர்.

இலஞ்சி கோமதி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (38). இவர் ஆம்வே நிறுவனத்தில் விநியோகஸ்தராக உள்ளார். இவரது மனைவி பேச்சியம்மாள், மகள்கள் தர்ஷினி (4) வர்ஷினி (7). நேற்று இரவு ஒன்றே முக்காலுக்கு கைலி கட்டிக்கொண்டிருந்த 3 பேர் வந்தனர். வீட்டுக்கு வெளியே கிரில் கதவு பூட்டப்படவில்லை என்பதால் லேசாக உடைத்து உள்ளே நுழைந்தனர்.

கைகளில் அரிவாள் கம்புகளோடு வந்தவர்கள், படுக்கையறையில் இருந்த பேச்சியம்மாள், மற்றும் குழந்தைகளின் கழுத்தில் அரிவாளை வைத்துக் கொண்டு, மிரட்டி பீரோவில் இருந்த 50 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிக் கொண்டு ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்த எஸ்.பி. விஜயேந்திர பிதரி நேற்று இரவே அந்த வீட்டைப் பார்த்துச் சென்றார்.

இன்று காலை போலீஸ் மோப்ப நாய் டைகர் அந்த இடத்துக்கு வந்துவிட்டு, வீட்டின் சுற்றுச் சுவர் ஏறிக் குதித்து, ஆட்டோ ஸ்டாண்ட் வரை சென்று நின்றது.

இது குறித்து குற்றாலம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

டிஎஸ்பி பாண்டியராஜன் விசாரணை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.