குற்றாலத்தில் இரிடியம் தருவதாக கூறி ஏமாற்றிய மூன்று பேரை குற்றாலம் போலீஸ் தனிப்படையினர் கைதுசெய்து,அவர்களிடமிருந்து ரூ5.48லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை, கொரட்டூர் துரைசாமி ரெட்டி 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ராஜ்நாரயணன்(32).இவர் பி.டெக் படித்து விட்டு,காண்ட்ராக்ட் தொழில் செய்துவருகிறார்.
காஞ்சிபுரம்,வடிவேல்நகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி(51).இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குற்றாலம் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
செங்கோட்டை அருகே வடகரை, உதயன்செல்வன்பட்டி மேலதெருவை சேர்ந்தவர் வெ.அருமைநாயகம்(44). வாவாநகரம் தெற்குபிள்ளையார் கோவில்தெருவை சேர்ந்தவர் வெ.கணபதி(56),
வடகரை, ரஹ்மானியாபுரம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சு.முகம்மது(58). அருமைநாயகம்,கணபதி,முகம்மது ஆகியோர் தங்களிடம் கோவில்கலசம் போன்ற அமைப்புடன் கூடிய இரிடியம் என்ற பொருள் இருப்பதாக,கருணாநிதியிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருணாநிதி,தனக்கு ஏற்கனவே அறிமுகமான ராஜ்நாரயணனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து,குற்றாலத்தில் ஞாயிறன்று காலையில் ராஜ்நாரயணன் ரூ5.48லட்சத்தை அருமைநாயகம் மற்றும் குழுவினரிடம் கொடுத்து இரிடியத்தை கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் பணத்தை பெற்றுகொண்டு இரிடியம் எதையும் தராமல் தப்பிவிட்டனர். இதுகுறித்து ராஜ்நாரயணன் குற்றாலம் காவல்நிலையத்தில் புகார்செய்தார்.காவல்ஆய்வாளர் மாரிமுத்து(பொறுப்பு)வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக காவல்உதவி ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இதில் சிறப்பு காவல்உதவிஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன்,மாடப்பன், ஞானமுத்து,முத்துலெட்சுமி, காவலர்கள் இதயத்துல்லா,முருகேசன்,மாரியப்பன், மஜீத் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அருமைநாயகம், முகம்மது,கணபதி ஆகியோரை கைது செய்து,அவர்களிடமிருந்து ரூ5.48லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தென்காசி போலீஸ் டி.எஸ்.பி.ஆர்.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ராஜ்நாரயணன் இதேபோன்று பலமுறை பல லட்சங்களை,பல இடங்களில் இழந்துள்ளார்.
ஆனால் குற்றாலத்தில் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்ற முயற்சித்தவர்களை போலீஸ் தனிப்படையினர் கைதுசெய்து பணத்தை பறிமுதல் செய்தனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

