நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தீபாவளி: மக்கள் வராததால் வெறிச்சோடியது ஆட்சியர் அலுவலகம்!

தீபாவளி பண்டிகை காரணமாக மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மனு அளிக்க பொதுமக்கள் வரவில்லை. இதனால், வாரந்தோறும் கூட்டமாக காட்சியளிக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:33 pm

தமிழ்ச்செல்வன்

தீபாவளி பண்டிகை காரணமாக மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மனு அளிக்க பொதுமக்கள் வரவில்லை. இதனால், வாரந்தோறும் கூட்டமாக காட்சியளிக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டி.ஜகந்நாதன் தலைமையில் வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்துத் துறை அலுவலர்களும் பங்குபெறும் இந்த கூட்ட த்தில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக, மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாரந்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

இதுதவிர, மக்கள் குறைதீர்க்கும் நாளன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத் துவதன் மூலம் அதன் கோரி க்கைகள் மீது அரசு அலுவலர்கள், பொது மக்களின் கவனம் ஈர்க்கப்படுவதை அடு்த்து வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏதேனும் ஒரு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதையொட்டி, ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புப் பணிக்கு நிறுத்தப்படுவதால் ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமைகளில்  பரபரப்பாகவே காட்சியளிக்கின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதையொட்டி, திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு பெருமளவில் பொதுமக்கள் மனுக் கொடுக்க வரவில்லை. அத்துடன், எந்த அமைப்பும் ஆர்ப் பாட்டமும் நடத்தவில்லை. இதன்காரணமாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் விடுமுறை நாட்களைப் போன்று வெறிச்சோடிக் காணப்பட்டன.இதன்காரணமாக, வழக்கமாக சுமார் 700 முதல் 800 மனுக்கள் வரும்நிலையில் திங்கள்கிழமை 185 மனுக்கள் மட்டுமே வரப்பெற்றன.

தொடர்ந்து, 60 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் டி.ஜகந்நாதன் வழங்கினார். அதன்படி, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசு புதியதாக அறிவித்துள்ள உத்தரவின்படி காசநோய், புற்றுநோய், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு மாதம் தலா ரூ.1000 பெறுவதற்கான ஆணையும், திருச்செங்கோடு தாலுகாவைச் சேர்ந்த 20 பேருக்கு குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர் செங்குட்டுவன், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.