ரூ.2000 லஞ்சம்: மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் கைது
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிபவர் எஸ்.அன்னபூரணி (34). இவர் தருமபுரி கோல்டன் தெருவில் வசிக்கும் செந்தில்குமாரின் மனைவி.


தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிபவர் எஸ்.அன்னபூரணி (34). இவர் தருமபுரி கோல்டன் தெருவில் வசிக்கும் செந்தில்குமாரின் மனைவி.
மொரப்பூரில், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி பழனி (49) (பாலசமுத்திரம் கிராமியம்பட்டியைச் சேர்ந்த வெள்ளை கவுண்டர் மகன்) ரூ. 75 ஆயிரம் உதவியில் வீடு வாங்கினார். ஒரு வருடத்துக்கு முன்னர் வீட்டையும் கட்டி முடித்தார். இன்னும் அவருக்கு இந்திரா நினைவு குடியிருப்பு தொகுப்பில் இருந்து ரூ.7,500 வர வேண்டியிருந்தது. இது குறித்து அவர் கேட்டபோது, ரூ. 2000 பணம் தந்தால், அதனை உடனே விடுவிப்பதாக அன்னபூரணி கூறினாராம். இதை அடுத்து, அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரையின் படி, ரூ. 2 ஆயிரம் பணம் அளித்தபோது, தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அன்னபூரணிய கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...