நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருவரங்கம் பெரிய கோவிலில் ஜெயலலிதாவுக்கு பூரணகும்ப மரியாதை

திருச்சி, மார்ச் 7: மாசி மகம் மற்றும் தனது பிறந்த தினத்தை ஒட்டி, திருச்சி திருவரங்கம் அரங்கநாதப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காகவும் சிறப்பு அர்ச்சனைக்காகவும் முதல்வர் ஜெயலலிதா திருவரங்கம் வந்

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:27 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, மார்ச் 7: மாசி மகம் மற்றும் தனது பிறந்த தினத்தை ஒட்டி, திருச்சி திருவரங்கம் அரங்கநாதப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காகவும் சிறப்பு அர்ச்சனைக்காகவும் முதல்வர் ஜெயலலிதா திருவரங்கம் வந்தார்.

மாலை 5.20 மணி அளவில் கோயிலுக்கு வந்த அவருக்கு பாரம்பரிய முறைப்படி பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ரங்கா ரங்கா கோபுர வாசல் வழியாக உள்ளே வந்த அவரை வரவேற்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், சக்கரத்தாழ்வார் சந்நிதி, உடையவர் சந்நிதி, கருடாழ்வார் சந்நிதி, மூலவர் அரங்கநாதப் பெருமாள் சந்நிதி, தாயார் சந்நிதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

சந்நிதிகளில் முதல்வர் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. வேறு யாகங்கள் பூஜைகள் எதற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை. கோயில் பிராகாரத்தில் முதல்வர் செல்வதற்காக சென்னையில் இருந்து பேட்டரி கார் கொண்டு வரப்பட்டிருந்தது. சென்ற முறை கோயில் பிராகாரத்தில் முதல்வர் வலம் வந்தபோது, சில இடங்களில் நின்று, அமர்ந்து ஓய்வெடுத்துச் சென்றிருந்தார். எனவே இந்த முறை பேட்டரி கார் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. 

மாலை 6.45க்கு சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு, கிழக்கு வெள்ளை கோபுரம் வழியாக முதல்வர் வெளியே வந்தார். அங்கிருந்து விமான நிலையத்துக்குச் சென்றார்.

இன்று மாலையே முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.