நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எஸ்.எம்.எஸ்ஸில் பரிசு விழுந்ததாகக் கூறி மதுரையில் ரூ.5 லட்சம் மோசடி

மதுரை, ஜன.9: மதுரையில் கல்லூர் மாணவர் ஒருவருக்கு 7 லட்சம் பவுண்டு லாட்டரியில் விழுந்துள்ளதாகக் கூறி எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இந்தத் தொகையைப் பெற வேண்டுமானால், அதற்கு கட்டணத் தொகையாக ரூ.5,10,399 செலுத்த

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:46 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஜன.9: மதுரையில் கல்லூர் மாணவர் ஒருவருக்கு 7 லட்சம் பவுண்டு லாட்டரியில் விழுந்துள்ளதாகக் கூறி எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இந்தத் தொகையைப் பெற வேண்டுமானால், அதற்கு கட்டணத் தொகையாக ரூ.5,10,399 செலுத்த வேண்டும் என்றும், அதற்கு சில ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும் என்றும் கூறி ஒரு பெண் அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். அதை நம்பிய மாணவர் மூன்று தவணையாக ரூ.5,10,399 ஐக் கொடுத்துள்ளார். ஆனால், அதன்பிறகு எந்தத் தகவலும் அவருக்கு வரவில்லை. இதனால் தான் நன்றாக ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த மாணவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகாரைப் பதிவு செய்து, அவரை ஏமாற்றிய நபர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, போலீசார் தேடிவருகின்றனர்.

இதனிடையே, இதுபோன்ற எஸ்,எம்.எஸ்கள் அதிகம் மதுரை நகரில் பரவுவதாகவும், எனவே யாரும் இதுகுறித்து நம்பவேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.