நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மக்கள் பிரச்னைகளைப் பேசியதற்கு வழக்கா? விஜயகாந்த் ஆவேசம்

இன்று காலை நாமக்கல் நீதிமன்றத்தில் விஜயகாந்துக்கு எதிராக அரசு தொடர்ந்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வந்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:47 pm

தமிழ்ச்செல்வன்

இன்று காலை நாமக்கல் நீதிமன்றத்தில் விஜயகாந்துக்கு எதிராக அரசு தொடர்ந்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வந்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,

மக்கள் நலப் பிரச்னைகளைப் பேசியதற்காக அரசு என் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. மக்கள் நலப் பிரச்னைகளைப் பேசியதற்கு வழக்கா? இந்த அரசு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு வரவில்லை. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள இந்த அரசு பழக வேண்டும். என் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். அவற்றை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல அரசுக்கு அழகு. இந்த அரசின் மீதான என் விமர்சனங்கள் இனி அதிகரிக்கும் என்றார் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.