சித்தேரி மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு திருமண கோஷ்டியினர், சித்தேரி பகுதி கிராமமான சூரியக்கடை என்னும் இடத்தில் திருமணம் முடிந்த பிறகு ஒரு டெம்போ வேனில் திரும்பினர். சித்தேரி மலைப்பகுதியில் இருந்து அருகில் உள்ள வேறொரு கிராமத்துக்கு அவர்கள் சென்றனர். இன்று மாலை 5 மணி அளவில் அவர்கள் சென்ற வேன் கட்டுப்பாடை இழந்து, தீர்த்தமலை அருகில் உள்ள மலைப்பகுதியில் திடீரெனக் கவிழ்ந்தது. இதில், மணப்பெண் உள்பட 3 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு வேன் டிரைவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதே காரணம் என்று சொல்லப்படுகிறது.