/

ஊட்டியில் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் சாலைமறியல்

ஊட்டி, அக்.14: ஊட்டியில் ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர் பயிற்சி - பி.எட். படித்தவர்கள் நடைமுறை ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள ஏதாவது பள்ளிகளில் சுமார் 40 தினங்கள் ஆசிரிய

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:48 pm

ஏ. பேட்ரிக்

ஊட்டி, அக்.14: ஊட்டியில் ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் பயிற்சி - பி.எட். படித்தவர்கள் நடைமுறை ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள ஏதாவது பள்ளிகளில் சுமார் 40 தினங்கள் ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், ஊட்டி பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கு கூடலூர் - கேரள எல்லையில் உள்ள பகுதி பள்ளிகளில் பயிற்சிக்காக கடந்த செப். 22ம் தேதி ஆணை கொடுக்கப்பட்டது.

இந்த ஆணை பெறப்பட்ட தினத்திலிருந்து 40 நாள்கள் கணக்கில் பயிற்சி ஆசிரியராக பணி செய்ய வேண்டும். இந்த நிலையில், கேரள எல்லையில் உள்ள அந்தப்  பள்ளிகளுக்கு இளம்பெண்களான தங்களால் தனியாகச் சென்று அத்தனை நாள்கள் தங்கி பணி செய்ய இயலாது என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், நகரப் பகுதிகளிலேயே பல்வேறு இடங்கள் காலியாக உள்ள நிலையில், கல்வித் துறை அலுவலர்கள் ஏன் பாராமுகம் காட்ட வேண்டும் என்று கோரி அவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரினர்.

ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத  நிலையில், பணி புரிய வேண்டிய நாள்கள் சுமார் 20 கழிந்துவிட்ட நிலையில் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி இந்த மாணவிகள் உதகை கூடலூர் சாலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் எதிரில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.