நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.3: விசைத்தறி கூலிப்பிரச்னையில் தீர்வு ஏற்படுத்தப்படாததை அடுத்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 200 கிராமங்களில் திங்கள்கிழமை கருப்புக்கொடி ஏற்பட்டது. தொடர்ந்து, புதன்கிழமை ஆயுதப

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:42 pm

தமிழ்ச்செல்வன்

திருப்பூர், அக்.3: விசைத்தறி கூலிப்பிரச்னையில் தீர்வு ஏற்படுத்தப்படாததை அடுத்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 200 கிராமங்களில் திங்கள்கிழமை கருப்புக்கொடி ஏற்பட்டது. தொடர்ந்து, புதன்கிழமை ஆயுதபூஜையை புறக்கணிக்க உள்ளதாகவும் விசைத்தறியாளர்கள் அறிவித்துள்ளனர்.

நூறு சதவீதம் கூலியுயர்வு கோரி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவும் செய்யு ம் விசைத்தறியாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம், உண்ணாவிரத ப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஊரக தொழில் துறை அமைச்சர் சி.சண்முக வேலு, தொழில் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர் களுடன் உடுமலையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், 40 சதவீதம் வரை கூலியுயர்வு தருவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்த னர். எனினும், விசைத்தறியாளர்கள் அதை ஏற்காததை அடுத்து அப்பேச்சு தோல்வி யில் முடிந்தது. இதையடுத்து, விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம், உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வதுடன் திருப்பூர், கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட  விசைத் தறியாளர்கள் வீடுகள் மற்றும் விசைத்தறி தொழிற்கூடங்களில் திங்கள்கிழமை கருப்புக் கொடி ஏற்று ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதென முடிவு செய்தனர்.

அதன்படி, இவ்விரு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லடம், சோமனூர், சூலூர், மங்கலம், தெக்கலூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 கிராமங்களிலுள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வீடுகள், தொழிற்கூடங்களில் திங்கள் கிழமை கருப்புக்கொடி கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, கூலிப்பிரச்னையில் சுமூக தீர்வு காணாவிடில் புதன்கிழமை ஆயுதபூஜையை புறக்கணிக்கவும், வியாழக்கிழமை பல்லடம், சோமனூரில் மனிதசங்கிலி போராட்டம் நடத்திடவும் விசைத்தறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 35 நாட்களாக தொடரும் இவ்வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தீபாவளி பண்டிகை உற்பத்தி உள்பட நாளொன்றுக்கு ரூ.36 கோடி வீதம் ரூ.1250 கோடிக்கு மேல் ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர, பல்லடம், சோமனூர், சூலூரில் கடந்த 12 நாட்களாக நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக 20க்கும் மேற்பட்டோரி ன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.