திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரப்பான்பூச்சி கட்சி: ஜனநாயகத்தில் அனைத்து குரல்களுக்கும் இடமுண்டு - ஆர்எஸ்எஸ்

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி குறித்த கேள்விக்கு, ஜனநாயகத்தில் அனைத்து குரல்களுக்கும் இடமுண்டு என்று ஆர்எஸ்எஸ் தெரிவித்தது குறித்து...

News image

ஜனநாயகத்தில் அனைத்து குரல்களுக்கும் இடமுண்டு - படம் - எக்ஸ், கோப்புப்படம்

Updated On :30 மே 2026, 9:19 am IST

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி குறித்த கேள்விக்கு, ஜனநாயகத்தில் அனைத்து குரல்களுக்கும் இடமுண்டு என்று ஆர்எஸ்எஸ் தலைவர் சுனில் அம்பேகர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர்.

தொடங்கிய சில நாள்களிலேயே, அதன் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. இதனையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.

முடக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் புதியதொரு எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்டது.

இது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்ததாவது:

ஒரு ஜனநாயகத்தில் நடைபெறும் எந்தவொரு விவாதத்தையோ அல்லது மக்கள் வெளிப்படுத்தும் பல்வேறு கருத்துக்களையோ ஒரு அதிர்ச்சியாகக் கருதக்கூடாது என்று நான் உணர்கிறேன். அவை இயல்பானவையாகக் கருதப்பட வேண்டும். அவற்றைக் கையாளும் அளவுக்கு ஊடகங்களுக்குப் போதுமான சுதந்திரம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

நமது மக்கள் சக்தியும், ஜனநாயகமும் வலிமையானவை. ஒவ்வொருவரின் குரலையும் உணர்வையும் உள்ளடக்கும் ஆற்றல் ஜனநாயகத்துக்கு உண்டு.

ஒரு ஜனநாயகத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. மேலும் அவற்றைக் கையாள்வதற்கான அனைத்து வழிகளும் நாட்டில் உள்ளன எனத் தெரிவித்தார்.

Summary

Responding to a question regarding the 'Cockroach Janata Party,' RSS leader Sunil Ambekar stated on Saturday that there is room for all voices in a democracy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.