திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக முழு ஆதரவு: அன்புமணி ராமதாஸ்

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாமக செயல்படும் - அன்புமணி ராமதாஸ்

News image

தமிழக முதல்வர் விஜய் - PTI

Updated On :10 மே 2026, 5:42 pm IST

விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவை அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(மே 10) தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “மக்கள் நலன் காப்பதற்கான விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவை அளிக்கும்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அந்தத் தவறை திருத்தச் செய்வதிலும் பொறுப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து, மக்கள் முன்னிலையில் முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்.

தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின் அவருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக, சிங்கப்பூர் தூதரக உயர் ஆணையர், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விஜயை வாழ்த்தி அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது :

புதிய முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பாமகவின் வாழ்த்துகள்: சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்!

தமிழ்நாட்டின் 12-ஆம் முதல்வராக த.வெ.க. தலைவர் விஜய் அவர்களும், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. புதிய முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருப்பது எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நோக்கமும், எதிர்பார்ப்பும் ஒன்று தான். எந்த வகையான போதையும் இல்லாத, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய, இளைஞர்களுக்கு தரமான கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்கக்கூடிய, உழவர்களின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக் கூடிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய, இவை அனைத்துக்கும் மேலாக சமூகநீதியை பாதுகாக்கக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான் அது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிரமாக முயல வேண்டும்.

த.வெ.கவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முதல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆணையில் புதிய முதலமைச்சர் முதல் கையெழுத்திட வேண்டும்; மற்ற வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் காப்பதற்கான விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவை அளிக்கும்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அந்தத் தவறை திருத்தச் செய்வதிலும் பொறுப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Summary

PMK fully supports all the measures taken by Vijay government: Anbumani Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.