பாஜகவின் தில்லி மாநிலத் தலைவர் உள்பட நான்கு மாநில தலைவர்களை அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நவீன் இன்று நியமித்துள்ளார்.
தில்லி பாஜக பிரிவின் தலைவராக இதுவரை வீரேந்திர சச்தேவா கட்சியின் தில்லி மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்புகளின்படி,
ஹரியாணா, பஞ்சாப் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கான கட்சித் தலைவர்களையும் நிதின் நவீன் அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அர்ச்சனா குப்தா ஹரியாணா பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். சர்தார் கேவல் சிங் தில்லான் பஞ்சாப் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
திரிபுரா மாநில பாஜக எம்எல்ஏ அபிஷேக் தேப்ராய், அம்மாநிலக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அருண் சிங் தெரிவித்தார்.
Summary
BJP national president Nitin Nabin on Thursday appointed Union minister Harsh Malhotra as the party's Delhi unit president.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜக மாநில துணைத் தலைவர் விலகல்... ‘அண்ணாமலைக்கு அணிலாக இருப்போம்’ என பேட்டி!

கா்நாடக காங்கிரஸ் தலைவராக பி.கே.ஹரிபிரசாத் நியமனம்: டி.கே.சிவகுமாா் வாழ்த்து!

அண்ணாமலை சந்திப்பு: நயினாருக்கு அழைப்புவிடுத்த தில்லி பாஜக தலைமை!








