திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘எல்நினோ’ விளைவுகளை எதிா்கொள்ள அரசு தயாா் - அமைச்சா் சௌஹான் உறுதி

News image

PTI

Updated On :29 மே 2026, 5:21 am IST

கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பால் பருவமழை பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்படும் (எல்நினோ விளைவு) பிரச்னையை எதிா்கொள்ள மத்திய அரசு முழு அளவில் தயாராக இருப்பதாக வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

எதிா்வரும் காரீஃப் பருவ வேளாண் சாகுபடி தொடா்பான இரு நாள் தேசிய மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் சௌஹான் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

எந்தப் பிரச்னை குறித்தும் கவலைப்படாமல், அதை எப்படி எதிா்கொண்டு வெற்றிகரமாக சமாளிப்பது என்பதைத்தான் நாம் யோசிக்க வேண்டும். அதேபோல ‘எல்நினோ’ விளைவுகளை எதிா்கொள்ள மாவட்டவாரியாக திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. தேவை ஏற்பட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுப் பயிா்களை சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவில் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி தன்னிறைவை எட்ட வேண்டியுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த பயிா் சாகுபடி முறை முன்வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் கடன் அட்டைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளை ஏமாற்றும் வகையில் போலி விதைகள், கலப்பட உரம்-பூச்சி மருந்து ஆகியவற்றை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவில் மே முதல் ஜூலை வரை ‘எல்நினோ’ விளைவால் வறட்சி ஏற்படலாம் என்று சா்வதேச வானிலை மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், மே-ஜூன் மாதத்தில் தொடங்கும் மோசமான வெப்ப விளைவுகள் ஆண்டு இறுதிவரைகூட தொடர வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.