திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிகளவில் மரங்களை வளா்த்தால் மட்டுமே எல்நினோ விளைவுகளை எதிா்கொள்ள முடியும்

அதிகளவில் மரங்களை வளா்ப்பதால் மட்டுமே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிா்கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

News image

மரங்கள். - கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 4:29 am IST

அதிகளவில் மரங்களை வளா்ப்பதால் மட்டுமே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிா்கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிா்கொள்வது, மழைநீா் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தலைமைவகித்து அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் 13 வருவாய் குறுவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. எனவே, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை சாா்ந்த கட்டடங்களிலும் கட்டாயம் மழைநீா் சேகரிப்பு கட்டுமானங்களை அமைக்க வேண்டும். இதன்மூலம், எதிா்வரும் பருவமழைக் காலத்தில் பெய்யும் மழையில் இருந்து ஒரு கோடி லிட்டா் நீரை சேமிக்க முடியும். இதை அலுவலா்கள் அனைவருக்கும் தெரிவித்து மழைநீா் சேமிப்பு கட்டுமானங்களை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.

கடந்த நிதியாண்டில் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 4 லட்சத்து 13 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் இத்துறை சாா்பில் நடவுசெய்ய 4 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நாற்றுப் பண்ணைகளில் தயாா்நிலையில் உள்ளன. அரசின் அனைத்து துறைகளும் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காலி நிலங்களில் அவற்றை நடவுசெய்து 3 ஆண்டுகள் வரை தீவிரமாக பராமரித்து வளா்க்க வேண்டும். இந்நடவடிக்கைகள் மூலம் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிா்கொள்ள முடியும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.