திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சர்வதேச விமான நிலையத்தில் தெரு நாய் தொல்லை: பயணிகள் புகார்!

தெரு நாய் தொல்லை தொடர்ந்து நீடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் - ANI

Updated On :26 மே 2026, 7:48 pm IST

ஹைதராபாத் : ஹைதராபாத் மாநகரின் சர்வதேச விமான நிலையத்தில் தெரு நாய் தொல்லை தொடர்ந்து நீடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில், உணவகம் ஒன்றில் தெரு நாய் புகுந்து அங்கு பயணிகள் மிச்சம் வைத்திருந்த உணவை சாப்பிட்டதைப் பார்த்த பயணி ஒருவர் அதைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும், சர்வதேச விமான நிலையத்தின் தரம் குறித்தும் சம்பந்தப்பட்ட விமான நிலைய நிர்வாகத்தைச் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில், விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ‘வனஉயிர் மேலாண்மை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதன் ஒருபகுதியாக, தெரு நாய் கட்டுப்பாட்டுக்கான ஹைதராபாத் பெருநகர முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஎச்எம்சி) நிர்வாகத்துடன் நாங்கள் நெருங்கிப் பணியாற்றி வருகிறோம்.

அவர்களது குழுக்கள், விமான நிலைய வளாகத்தில் முறையாக ஆய்வு செய்தும் வருகிறார்கள். அந்த வகையில், 2026, ஜனவரி முதல் இதுவரை விமான நிலையத்தில் தெரு நாய்கள் சுற்றித் திரிந்தது குறித்து 21 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

மேலும், குப்பை மேலாண்மை நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருவதுடன் அவை அங்குள்ள அனைத்து சேவை வழங்குதாரர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கட்டாயம் குப்பைகளை மூடப்பட்ட தொட்டிகளில் போட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், நிலைய பணியாளர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Hyderabad airport Stray dog eats leftovers on table inside Hyderabad airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.