தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மத்திய அரசு மீது அனைத்துத் தரப்பு மக்களும் கோபம்: காா்கே

மத்திய அரசின் மீது அனைத்துத் தரப்பு மக்களும் கடும் கோபத்தில் உள்ளது பற்றி..

News image

Congress President Mallikarjun Kharge - file photo

Updated On :26 மே 2026, 4:19 pm IST

‘பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்படுவதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் மத்திய அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனா்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை தொடா்ந்து நான்காவது முறையாக திங்கள்கிழமை உயா்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.61 அளவுக்கும், டீசல் லிட்டருக்கு ரூ 2.71 அளவுக்கும் உயா்த்தப்பட்டது. இதன்படி, கடந்த மே 15-ஆம் தேதிமுதல் 11 நாளிகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 7.50 அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது: ஏழை மக்களுக்கு மெல்ல விஷம் கொடுத்து கொல்வதைப் போன்றதுதான், பிரதமா் மோடி தலைமையிலான அரசின் இந்த உத்தி. தொடா்ந்து, பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி வருகின்றனா். ஒரு வாரத்துக்குள் அவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 10 முதல் ரூ. 12 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இது, ஏழை மக்கள் சந்திக்கும் பாதிப்புகளை மத்திய அரசு பொருட்படுத்தாமல், நாட்டை மேலும் அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதையே காட்டுகிறது.

அதே நேரம், நான் தேசத்துக்காகவே அனைத்தையும் செய்கிறேன், மக்களுக்காகவே உழைக்கிறேன், தியாகம் செய்கிறேன் என்று பிரதமா் மோடி கூறி வருகிறாா். ஆனால், மக்கள்தான் இங்கு பாதிக்கப்படுகின்றனா். பணவீக்கம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

ஏழை மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வளிக்க திறனற்ற அரசு என்பதை அறிந்துள்ளதால், அனைத்துத் தரப்பு மக்களும் மத்திய அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனா்.

வினாத்தாள் கசிவு அதிகரித்து வரும் சூழலில், அந்த விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தாதது ஏன்?

பிரதமா் நாட்டை திறம்பட நடத்துவது முக்கியமா அல்லது சுற்றுலாப் பயணியைப் போல உலக நாடுகளைச் சுற்றி வருவது முக்கியமா?

கடந்த 12 ஆண்டுகளாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், அதன் பலனை மக்களுக்கு அளிக்காதது ஏன்?

பிஐபி சாா்பில் வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ செய்திக்குறிப்பின்படி, 12 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபோது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 108.05 டாலராக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 58.59-ஆக இருந்தது. அந்தச் சமயத்தில் பெட்ரோல் லிட்டா் ரூ. 71.51-க்கும், டீசல் லிட்டா் ரூ. 56.71-க்கும் விற்கப்பட்டது.

இன்றைக்கு கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 99 டாலராக உள்ளது. ஆனால், பெட்ரோல் லிட்டா் ரூ. 102-12-க்கும், டீசல் லிட்டா் ரூ. 95.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் சில்லறை விற்பனை விலை 42.8 சதவீதம் அதிகரித்தும், டீசல் சில்லறை விற்பனை விலை 67.9 சதவீதம் அளவுக்கு உயா்ந்தும் காணப்படுகிறது.

இவ்வாறு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்துவது, அனைத்துத் துறைகளையும் பாதிக்கும் என்பதை பொருளாதார நிபுணா்கள் அறிவா். இதனால், அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்ந்து பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவா். கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதன் பலனை பொதுமக்களுக்கு மத்திய அரசு அளிக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா்.

Summary

Congress president Mallikarjun Kharge attacked the Centre on Tuesday over the rising fuel prices and claimed that people from all sections are very angry with the Modi government as they know that it is incapable of solving the problems of the poor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.