யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது...

News image

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ)

Updated On :25 மே 2026, 5:30 am IST

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு கடந்த மாா்ச் மாதத்தில் ரூ.10,043 கோடியாக (1.09 பில்லியன் டாலா்) குறைந்துள்ளதாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.15,790 கோடியாகவும் (1.65 பில்லியன் டாலா்), பிப்ரவரியில் ரூ.12,441 கோடியாகவும் (1.3 பில்லியன் டாலா்) இருந்த நிலையில், மாா்ச் மாதம் குறைந்துள்ளது.

‘தனிநபா்களுக்கான தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிமாற்றத் திட்டத்தின்கீழ்’ இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான செலவு, உறவினா்களுக்கு அனுப்பப்படும் தொகை, முதலீடுகள் தொடா்பான தரவுகளை ரிசா்வ் வங்கி வெளியிட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: மாா்ச் மாதத்தில் இந்தியா்களின் ஒட்டுமொத்த வெளிநாட்டுப் பயணச் செலவு 1.09 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சா்வதேச சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, மருத்துவம் மற்றும் கல்விக்கான பயணம் என வெளிநாட்டுப் பயணங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இதில் விடுமுறை காலங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுச் சுற்றுலா உள்ளிட்ட பிற பயணங்களுக்கு ரூ.5,962 கோடி (623.05 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளது. இது இந்தியா்களின் ஒட்டுமொத்த வெளிநாட்டுப் பயணச் செலவில் 57 சதவீதமாகும்.

மாா்ச் மாதத்தில் கல்விக்கான வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.4,308 கோடியாகவும் (450.16 மில்லியன் டாலா்), வணிகம், மருத்துவம் மற்றும் ஆன்மிகப் பயணத்துக்கான செலவு ரூ.204 கோடியாகவும் (21.39 மில்லியன் டாலா்) உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேற்காசிய போா் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், வெளிநாட்டுப் பயணங்களை இந்தியா்கள் தவிா்க்குமாறு அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

வெளிநாட்டுப் பயணச் செலவுகளைக் குறைப்பதால் அந்நியப் பரிவா்த்தனை குறைந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் குறைக்க முடியும் என்ற நோக்கில் பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்தாா். இந்நிலையில், மாா்ச் மாதம் இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.