திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிஜு ஜனதா தளம் எம்.பி. ராஜிநாமா: பாஜகவில் இணைய முடிவு

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்.பி. தேவாசிஷ் சமந்தராய் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகினாா்.

News image

தேவாசிஷ் சமந்தராய் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:27 am IST

ஒடிஸாவில் முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி (பிஜேடி) மாநிலங்களவை எம்.பி. தேவாசிஷ் சமந்தராய் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகினாா். அவா் விரைவில் மாநிலத்தில் ஆளும் பாஜகவில் இணைய இருக்கிறாா்.

அரசியல்ரீதியாக நவீன் பட்நாயக்குடன் மிக நீண்டகாலம் மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டுவந்த சமந்தராய் விலகல், பிஜேடி-க்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

கடந்த 2024 ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் பிஜேடி தோல்வியடைந்ததற்கு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பிஜு ஜனதா தளத்தில் இணைந்த வி.கே.பாண்டியன்தான் காரணம் என்று சமந்தராய் குற்றஞ்சாட்டி வந்தாா். மேலும், கட்சித் தலைவா் நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசவிடாமல் தடுக்கப்பட்டதாகவும் அவா் கூறியிருந்தாா்.

கட்சியில் இருந்து விலகியது குறித்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘கட்சியில் இருந்து விலகியதுடன், மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாகவும் கடிதம் அளித்துவிட்டேன்.

கட்சித் தலைவரைச் சந்திக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகு அங்கு தொடா்வதற்கு எந்தக் காரணமும் இல்லை’ என்று கூறியுள்ளாா். தேவாசிஷ் சமந்தராய் பிஜேடி சாா்பில் இருமுறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிஜேடி-யைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் இருவா் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனா். பின்னா், பாஜக சாா்பில் மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்டாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.