கர்நாடகம் மாநிலம் கலபுரகியில், நீட் மறுதேர்வு எழுதயிருந்த மாணவி ஒருவர், தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தற்கொலை செய்துகொண்ட பாக்கியஸ்ரீ (18), பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 92 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார்.
மாணவியின் தந்தை ராஜசேகர் தெரிவித்ததாவது:
எங்கள் குடும்பத்தில் எந்தக் கவலையோ பிரச்னையோ இருக்கவில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.
ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வில் அவள் நன்றாக தேர்வெழுதியிருந்தாள். எல்லாம் நன்றாகப் சென்றுகொண்டிருந்தது. ஒருவேளை, மீண்டும் நீட் தேர்வு எழுதுவது பற்றி அவள் மனதில் சில அச்சங்கள் இருந்திருக்கலாம். நான் யாரையும் குறை கூறவில்லை. யாரையும் குற்றம் சாட்டவில்லை. அவளுடைய வலியோ வேதனையோ நமக்கு தெரியாது. நான் என்ன சொல்வது? எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்தத் தேர்வை ரத்து செய்து, வரும் ஜூன் 21 ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Summary
In Kalaburagi, Karnataka, the father of a student who was scheduled to retake the NEET exam stated on Sunday that she committed suicide by hanging herself from a ceiling fan at her home.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








