லக்னௌ : பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் வெப்ப அலைக்கு மத்தியில் பகலிலும் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் லக்னௌ மட்டுமில்லாது மீரட், கோண்டா மற்றும் ஏனைய ஊரக மாவட்டங்களிலும் எம்எல்ஏக்கள், மேயர்கள் மற்றும் பிற அரசு நிர்வாக உயர் பதவி வகிப்பவர்கள் இல்லங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தர பிரதேசத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மின்வெட்டு பிரச்சினையால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அம்மாநில மின்சார துறை அமைச்சர் ஏ. கே. சர்மா பேசும்போது, “ மின் விநியோகத்தை சீராக்கவும் வரலாறு காணாத மின் தேவையை சமாளிக்கவும் மாநில மின்சார கழகம் தங்களால் இயன்ற ஒவ்வொரு முயற்சியையும் எடுத்து வருவதாக” குறிப்பிட்டார்.
மின் தடையால் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் அரசுக்கு நெருக்கடி அளித்து வருவதை உ.பி.யில் பார்க்க முடிகிறது.
இத்தகைய பிரச்சினைகளில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குடிமக்கள் அரசை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே தவிர அவர்களை இருளில் தவிக்க விடுவதற்காக அல்ல என்று மின்சார துறை அமைச்சருக்கு பாஜக எம்எல்ஏ ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, உ.பி. மின் வாரிய உயரதிகாரியொருவர் தெரிவித்திருப்பதாவது :
“ஊரகப் பகுதிகளுக்கு 18 மணி நேர மின் விநியோகம் என்பதே நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், பல மாவட்டங்களில் வெறும் 5 - 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கக்கப்படுகிறது. இதற்கான முக்கிய காரணங்கள், தொடர் பழுதுகள் ஏற்படுவதும், பழுதுகளைச் சீரமைப்பதில் தாமதம் ஏற்படுவதுமே.
மின்சார உற்பத்தி குறைவால் மட்டுமே மின் தடை பிரச்சினை ஏற்படவில்லை என்றும், மின் விநியோகத்திலும் பராமரிப்பு பணிகளிலும் பிரச்சினைகள் நிலவுவதால் மின் தடை பூதகரமாக வெடித்துள்ளது.
உ.பி. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்திருப்பதாகவும், அதில், மின் தடை அதிகரிப்பதற்கு வெப்பநிலை உயருவதும் ஒப்பந்தத் தொழிலாளர் பற்றாக்குறையுமே காரணமாகியிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்” தெரிவித்தார்.
Summary
power cut in Uttar Pradesh - Widespread power outages across Uttar Pradesh amid a brutal heatwave have sparked street protests
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









