திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் மறுதேர்வை 100% தவறில்லாமல் நடத்த அரசு இலக்கு!

நீட் மறுதேர்வை 100% தவறில்லாமல் நடத்துவதை அரசு இலக்காகக் கொண்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது குறித்து...

News image

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் - ANI

Updated On :22 மே 2026, 5:39 pm IST

நீட் மறுதேர்வை 100 சதவிகிதம் தவறில்லாமல் நடத்துவதை அரசு இலக்காகக் கொண்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ரத்து செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

இதனிடையே, நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று என்டிஏ அறிவித்திருந்தது.

இது குறித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது:

இதன்மூலம், 22 லட்சம் மாணவர்கள் அளவற்ற மன வேதனையை அடைந்திருக்கிறார்கள். அந்த வேதனையைப் புரிந்துகொண்டு அதற்குப் பொறுப்பேற்று, நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரின் சதியால், ஒரு மாணவர் கூட தங்களுக்குரிய சரியான இடத்தை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை.

இதனால், நாங்கள் பல்வேறு விமர்சனங்களையும் சவால்களையும் எதிர்கொள்கிறோம். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்த அமைப்பைச் சீர்படுத்துவது நமது பொறுப்பு. கண்ணை மூடிக்கொண்டு பிரச்னையிலிருந்து விலகிச் செல்வது நமது கடமையல்ல.

ஆகவே, வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மறுதேர்வு 100 சதவிகிதம் எந்தத் தவறும் இன்றி நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Summary

Union Education Minister Dharmendra Pradhan stated on Friday that the government aims to conduct the NEET re-examination with 100 percent error-free execution.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.