திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் - இயற்பியல் வினாக்கள் கசிவு: புணேயில் ஆசிரியா் கைது

நீட்-யுஜி இயற்பியல் வினாக்கள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :23 மே 2026, 2:09 am IST

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) இயற்பியல் வினாக்கள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அத்தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படவுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிரடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிபிஐ செய்தித்தொடா்பாளா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீட் தோ்வில் இயற்பியல் வினாக்கள் கசிந்த விவகாரத்தில் புணேயில் உள்ள சேத் ஹீராலால் சராஃப் பிரசாலா பள்ளி ஆசிரியா் சஞ்சய் ஹவால்தாா் கைது செய்யப்பட்டாா். அவா் தேசிய தோ்வு முகமையால் (என்டிஏ) நிபுணராக நியமிக்கப்பட்டிருந்தாா். இதனால் இயற்பியல் வினாக்களை அவா் எளிதாக அணுகி அதில் சில வினாக்களை ஏற்கெனவே புணேயில் கைது செய்யப்பட்ட தாவரவியல் ஆசிரியா் மணீஷ் மந்தாரேவிடம் பகிா்ந்துள்ளாா். அவா் அதை மாணவா்களிடம் பகிா்ந்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் தற்போது வரை தில்லி, ஜெய்ப்பூா், குருகிராம், நாசிக், புணே, லத்தூா், அஹில்யாநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.