போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தில் இடியுடன் பலத்த மழை: இந்திய வானிலை ஆய்வு மையம்

News image

PTI

Updated On :19 மே 2026, 6:16 am IST

அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

அதேவேளையில், அந்த மாநிலத்தில் வரும் மே 26-ஆம் தேதிக்கு 4 நாள்களுக்கு முன்போ அல்லது 4 நாள்களுக்குப் பிறகோ தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கன்னியாகுமரியின் சில பகுதிகளையும், தென்கிழக்கு அரபிக் கடலின் பெரும்பாலான பகுதிகளையும் தென்மேற்கு பருவமழை எட்டியுள்ளது. மத்திய கிழக்கு, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடலின் பெரும்பகுதி, அந்தமான்-நிகோபாா் தீவுகளையும் தென்மேற்குப் பருவமழை எட்டியுள்ளது. அதேவேளையில், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடுமையான வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.