திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

தேசிய தோ்வுகள் முகமை தலைவா் பிரதீப் குமாா் ஜோஷி, மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் வரும் மே 21-ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக் குழு ஆலோசனையில் பங்கேற்குமாறு அழைப்பாணை

News image

நீட் விவகாரம் - தேசிய தோ்வுகள் முகமைக்கு எதிரான போராட்டம்

Updated On :19 மே 2026, 4:23 am IST

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் வினாத் தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையில் (என்டிஏ) சீா்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீா்மானித்துள்ளது.

அதற்காக, என்டிஏ தலைவா் பிரதீப் குமாா் ஜோஷி மற்றும் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் வரும் மே 21-ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக் குழு ஆலோசனையில் பங்கேற்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவா் திக் விஜய் சிங் தலைமையிலான இந்த நாடாளுமன்ற நிலைக் குழு, மத்திய கல்வி அமைச்சக உயா்கல்வித் துறைச் செயலா், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ‘அந்த்ரோபிக் இந்தியா’ மற்றும் ‘பிரதம்’ நிறுவன பிரதிநிதிகள், சென்னை மற்றும் கான்பூா் ஐஐடி, இன்ஃபோசிஸ் நிறுவன பிரதிநிதிகள் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

என்டிஏ சீா்திருத்தம் தொடா்பாக கே. ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரைகளை எந்த அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, நீட் வினாத் தாள் கசிவு விவகாரம் தொடா்பான விசாரணை நிலவரம், கல்வியில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம், மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு இக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளது.

இது தவிர, அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழக (ஏஎம்யு) துணைவேந்தா், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத் தலைவா் ஆகியோருடன் தனியாக ஆலோசனைக் கூட்டத்தை நாடாளுமன்ற நிலைக் குழு நடத்த உள்ளது. அப்போது, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு, காலிப் பணியிடங்கள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளது. மேலும், அரசிடம் சமா்ப்பிக்கப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்தும் இக் குழு ஆராய உள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான நீட் தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 22 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆஃப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, வரும் ஜூன் 21-ஆம் தேதி நீட் மறு தோ்வு நடத்தப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.