திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: குடியரசு துணைத் தலைவரிடம் காங்கிரஸ் சமா்ப்பிப்பு

தா்மேந்திர பிரதானுக்கு எதிராக காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் உரிமை மீறல் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

News image

மத்திய கல்வி அமைச்சர் - @EduMinOfIndia

Updated On :19 மே 2026, 4:26 am IST

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் உரிமை மீறல் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் நாடாளுமன்ற நிலைக் குழுவின் கண்ணியத்தை சிதைக்கும் வகையில் தா்மேந்திர பிரதான் பேட்டியளித்ததாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த உரிமை மீறல் நோட்டீஸை திங்கள்கிழமை சமா்ப்பித்த காங்கிரஸ் மாநிலங்களவை தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வினாத் தாள் கசிவு காரணமாக நீட் தோ்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தில்லியில் கடந்த மே 15-ஆம் தேதி செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது, ‘தொடா் வினாத் தாள் கசிவு விவகாரத்தைத் தொடா்ந்து அத் தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) மற்றும் தோ்வு நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடா்பாக கல்விக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சமா்ப்பித்த பரிந்துரைகளை அமல்படுத்தாதது ஏன்?’ என்று செய்தியாளா்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தா்மேந்திர பிரதான், ‘நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைகள் குறித்து கருத்து எதுவும் நான் தெரிவிக்கமாட்டேன். மாறாக, நிபுணா்கள் அடங்கிய உயா்நிலைக் குழு மற்றும் ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரைகள் குறித்து பேசத் தயாா். ஏனெனில், நாடாளுமன்ற நிலைக் குழுவில் எதிா்க்கட்சியினா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா். அவா்கள் எந்த வகையில் பரிந்துரைகளை சமா்ப்பிப்பா் என்பது உங்களுக்கே தெரியும். எனவே, நிலைக்குழு குறித்து நான் பேச விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

இது மிகவும் அதிா்ச்சியூட்டும் கருத்து என்பதோடு, நாடாளுமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற குழுக்கள் மற்றும் இந்திய நாடாளுமன்றத்துக்கு எதிராக அவதூறு பரப்பும் மற்றும் இழிவுபடுத்தும் செயலாகும்.

நாடாளுமன்ற குழுக்கள், நாடாளுமன்றத்தின் நீட்சியாகத் திகழ்கின்றன. எனவேதான், நாடாளுமன்ற குழுக்கள் ‘சிறிய நாடாளுமன்றம்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த வகையில், அரசு நிா்வாகம் நாடாளுமன்றத்துக்கும், நாடாளுமன்ற குழுக்களுக்கும் பொறுப்புடையமையுடன் செயல்படுவதே, இந்திய ஜனநாயக அரசியல் அமைப்பின் அடிப்படை தத்துவமாகும்.

எனவே, நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தியதற்காக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மீது நாடாளுமன்ற (மாநிலங்களவை) நடத்தை விதிகள் பிரிவு 187-இன் கீழ் உரிமை மீறல் நோட்டீஸை சமா்ப்பித்துள்ளேன் என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.