திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து...

News image

என்டிஏ - பிரதிப் படம்

Updated On :16 மே 2026, 1:21 pm IST

தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி (யூடிஎஃப்) சார்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்தன.

அதாவது, நீட் தேர்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களில், ஏறக்குறைய 600 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா-விடை வங்கியில் இடம்பெற்றிருந்ததாகப் புகார் எழுந்த நிலையில் அந்தத் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இதற்கான மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் எனவும் இனிவரும் காலங்களில் நீட் தேர்வு கணினிவழியில் நடைபெறும் எனவும் என்டிஏ உத்தரவிட்டிருந்தது. மேலும், வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி (யூடிஎஃப்) சார்பில், தேசிய தேர்வு முகமையை அதன் தற்போதைய வடிவத்தில் கலைக்கக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 32-ஆவது பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான, ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி, என்டிஏ நீட் தேர்வை நடத்தியதில் தோல்வி அடைந்ததாகக் குற்றம் சாட்டியும், தேர்வு நடத்தப்படும் முறையில் சீர்திருத்தங்களைக் கோரியும் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A petition seeking the dissolution of the National Testing Agency (NTA) was filed in the Supreme Court on Saturday on behalf of the United Doctors Front (UDF).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.