தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசு

நீட் மறுதேர்வு கூடுதலாக நேரம் வழங்கப்படுவது பற்றி...

News image

நீட் தேர்வு - பிடிஐ

Updated On :15 மே 2026, 12:02 pm IST

நீட் மறுதேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு காரணமாக மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் மறுதேர்வு நடைபெறும் என்று இன்று காலை தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

“வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாளே, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மறுதேர்வுக்கும் கட்டணம் வாங்கப்படாது.

மாணவர்கள் அவர்கள் தேர்வெழுத விரும்பும் நகரத்தை மீண்டும் தேர்ந்தெடுக்க ஒருவார காலம் அவகாசம் அளிக்க என்டிஏ முடிவு செய்துள்ளது. மாணவர்களின் வசதிக்காகவும், அவர்களின் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு தேர்வு நேரத்தை 15 நிமிடங்கள் நீடிக்க என்டிஏ முடிவு செய்துள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஜூன் 14 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்த முறை தேர்வெழுதும் மாணவர்களின் போக்குவரத்து சிரமத்தை குறைக்க நானும் அனைத்து மாநில முதல்வர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

ஜூன் 21 ஆம் தேதி வானிலை மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் என்டிஏ பரிசீலித்து வருகிறது” என்றார்.

Summary

NEET Re-exam! 15 Additional Minutes to be Provided! — Central Government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.