திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுடன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.டி. சதீசன் சந்திப்பு...

News image

பினராயி விஜயனுடன் வி.டி. சதீசன் - ANI

Updated On :15 மே 2026, 1:08 pm IST

கேரளத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை, காங்கிரஸ் சார்பில் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.டி. சதீசன் இன்று(மே 15) சந்தித்துப் பேசியுள்ளார்.

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு கே.சி. வேணுகோபால். வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் இடையே போட்டி இருந்த நிலையில், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும் சதீசன் தேர்வாங்கியுள்ளார்.

அதேபோல, கேரளத்தில் தற்போதைய எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Story image

இந்நிலையில் முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று, புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.டி. சதீசன் சந்தித்துப் பேசியுள்ளார்.

கேரள முதல்வராக வி.டி. சதீசன் வருகிற மே 18 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். மேலும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களையும் வி.டி. சதீசன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தும் வாழ்த்து பெற்றும் வருகிறார்.

தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியடைந்ததையடுத்து முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜிநாமா செய்தபோதிலும் வி.டி. சதீசன் பதவியேற்கும் வரை முதல்வராகத் தொடர்கிறார்.

Summary

Keralam CM designate VD Satheesan meets outgoing CM and LDF LoP Pinarayi Vijayan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.