பதினாறு மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை மேற்கொள்ள இருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
பிகாா், மேற்கு வங்கம், தமிழகம், கேரளம், புதுச்சேரி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கா், கோவா, அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு, அஸ்ஸாம் ஆகியவற்றில் ஏற்கெனவே இரு கட்டங்களாக எஸ்ஐஆா் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து 3-ஆவது கட்டமாக 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் அந்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. இதுதொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தில்லி, ஒடிஸா, மிஸோரம், சிக்கிம், மணிப்பூா், உத்தரகண்ட், சண்டீகா், தெலங்கானா, பஞ்சாப், கா்நாடகம், மேகாலயஇஈ, மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், நாகாலாந்து, திரிபுரா, தாத்ரா - நகா் ஹவேலி, தமன் - தியூ ஆகியவற்றில் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மே மாதம் 30-ஆம் தேதிமுதல் பல கட்டங்களாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து பிறகு அறிவிக்கப்படும். 3-ஆவது கட்ட எஸ்ஐஆா் பணியில் 3.94 லட்சம் வாக்குச்சாவடி நிலையிலான அலுவலா்கள் ஈடுபடுவா். அவா்கள் வீடு வீடாகச் சென்று 36.73 கோடி வாக்காளா்களையும் நேரில் சந்தித்து பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவா் என்று தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
3-ஆவது கட்ட எஸ்ஐஆா் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரமும் ஒன்று. அங்கு மொத்தம் 9 கோடியே 86 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். இவா்களை நேரில் சந்தித்து வாக்காளா் குறித்த தகவலைத் தயாரிக்க வாக்குச்சாவடி நிலையிலான அலுவலா்களுக்கு ஜூன் மாதம் 20-29 வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதையடுத்து ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை எஸ்ஐஆா் பணியில் அவா்கள் ஈடுபடுவா் என்று அந்த மாநில தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Summary
The Election Commission of India has announced that the Special Summary Revision (SSR) of voter rolls will commence on May 30 in 16 states and 3 Union Territories across the country.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரத்தில் 15 பேரை கைது செய்த என்ஐஏ

மேற்கு வங்க எஸ்ஐஆா்: இதுவரை 6,581 மேல்முறையீடுகளில் தீா்ப்பாயம் இறுதி முடிவு

தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் வாக்குகளை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தம்: டி.கே.சிவகுமாா்

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆா்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



