தமிழ் செய்திகள்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 95.85 ஆக சரிந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று(புதன்) வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.71 ஆக இருந்த நிலையில் இன்று(வியாழக்கிழமை) காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 95.73 ஆக இருந்தது.
அதிகபட்சமாக இன்றைய வர்த்தக நேர இடையே 95.85 ஆக மேலும் சரிந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் அதிகபட்ச சரிவு இதுவாகும்.
கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 106 டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும் உலக அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.
Summary
Indian rupee hits new all-time low of 95.85 per dollar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










