திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கேரளத்தில் ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் அர்லேகர்!

கேரளத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி. சதீசனுக்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளார்...

News image

கேரளத்தில் ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார்...

Updated On :14 மே 2026, 9:54 pm IST

கேரளத்தில், புதியதாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி. சதீசனுக்கு அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, நீண்ட இழுப்பறிக்குப் பிறகு கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டதாக, இன்று (மே 14) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகள் வழங்கிய ஆதரவுக் கடிதங்களுடன் சென்று கேரள ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க வி.டி. சதீசன் உரிமை கோரினார்.

இந்த நிலையில், கேரளத்தில் புதியதாக ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு ஆளுநர் அர்லேகர் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம், வரும் திங்களன்று (மே 18) வி.டி. சதீசன் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், முதல்வராகப் பதவியேற்கும் வி.டி. சதீசனுடன் 21 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்பதாகக் கூறப்படுகிறது. மேலும், புதிய அரசுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் வரும் மே 21 அன்று நடைபெறும் எனவும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அன்று பதவியேற்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், வரும் மே 21 அன்று நடைபெறும் கேரளத்தின் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

In Kerala, Governor Arlekar has invited V.D. Satheesan to form the new government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.