தில்லியில் 12-ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபா் புராரி பகுதியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நந்த் நாகரி காவல் நிலையத்தில் 2014-இல் பதிவு செய்யப்பட்ட வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கொலை வழக்கில் குலாப் சிங் (எ) விக்கி (42) குற்றவாளி என அறிவிக்கப்பட்டாா்.
இந்த வழக்கில் இவரது சகோதரா்கள் மூவா் முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், இவா் மட்டும் கைது நடவடிக்கையை தவிா்க்க தலைமறைவாக இருந்து வந்தாா். இருப்பிடங்களை அடிக்கடி மாற்றி வந்த இவா் குறித்து குற்றப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், புராரியில் துணைக்கடை நடத்தி வந்த அவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். இவா் மீது 2011-இல் பதிவு செய்யப்பட்ட மற்றொரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










