மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியை வீழ்த்தி வெற்றி பெற்ற பவானிபூர் தொகுதியைத் தக்க வைத்தார் முதல்வர் சுவேந்து அதிகாரி.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசை வீழ்த்தி முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாஜக அரசின் முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார். மேலும், பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி இவ்விரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
இத்துடன், பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதன்கிழமை (மே 13) பதவியேற்றுக்கொண்டனர்.
அப்போது, நந்திகிராம் தொகுதியை ராஜிநாமா செய்வதாகவும், மமதாவை வீழ்த்தி வெற்றி பெற்ற பவானிபூர் தொகுதியைத் தக்கவைப்பதாகவும் முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். இதையடுத்து, பவானிபூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இதுபற்றி, முதல்வர் சுவேந்து அதிகாரி கூறுகையில்,
“நந்திகிராம் தொகுதியில் இடைத்தேர்தல் மூலம் வேறொருவர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் அங்குள்ள மக்கள் நான் அங்கு இல்லாததை உணரும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்.
நந்திகிராம் மக்களுக்கு நான் அளித்த அனைத்து வளர்ச்சி வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.
Summary
CM Suvendu Adhikari retained the Bhabanipur constituency in West Bengal, having secured victory by defeating Mamata Banerjee.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே. வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு!

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!

பவானிபூரில் மமதா பின்னடைவு! இரு தொகுதிகளிலும் சுவேந்து அதிகாரி முன்னிலை!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



