மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை (மே 1) தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின்மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் மமதா, தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு இன்று (மே 1) திடீரெனச் சென்றார். அங்கு சுமார் 4 மணி நேரம் இருந்துள்ளார்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அப்படி யாரேனும் செய்ய முயன்றால் கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து பேசிய அந்த மாநிலத்தின் பாஜக தலைவரும் பவானிபூரில் மமதாவை எதிர்த்துப் போட்டியுடும் வேட்பாளருமான சுவேந்து அதிகாரி, “மமதா செய்வது அப்பட்டமான நாடகத்தைக் குறிக்கிறது. கழிவறை போன்ற வசதிகள் கொண்ட வாகனத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு விரைந்து சென்று, அங்கு நான்கு மணி நேரம் தங்கியிருந்தார். அவர் தேர்தல் முடிவை மாற்ற விரும்பினாலும், அது ஒருபோதும் நடக்காது.
மேலும், நீண்ட காலம் தங்குவதற்கு முறையான இடம் இல்லாததால், அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.
அவருடைய திட்டம் என்ன? அவர் செய்வது எதுவும் சரியில்லை. அவர் தோல்வி அடைவார் என்பதால் விரக்தியில் இருக்கிறார். மேற்கு வங்கத்தில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அது அனைவருக்கும் தெரியும். சரியான புள்ளிவிவரங்கள் மே 4 ஆம் தேதிக்குள் தெரியவரும். ஆனால், ஒரு பாஜக அரசு வரப்போகிறது” எனத் தெரிவித்தார்.
Summary
BJP leader Suvendu Adhikari stated on Friday (May 1) that West Bengal Chief Minister Mamata Banerjee is in a state of frustration over her impending defeat in the Assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைத்து இந்துக்களும் பாஜகவுக்கே வாக்களிக்கின்றனர்! சுவேந்து அதிகாரி
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி
மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் சூப்பர் குடியரசுத் தலைவர் ஆட்சி: மமதா பானர்ஜி
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



