மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அனைத்து இந்துக்களும் பாஜகவிற்கே வாக்களித்து வருவதாகவும் அனைவரும் பெருமளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறினார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று(ஏப். 29) 142 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முதல்கட்டத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இன்றைய 2-ம் கட்டத் தேர்தலில் 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவர் என 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, "அனைவரும் பெருமளவில் வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து இந்துக்களும் பாஜகவிற்கே வாக்களித்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
பவானிபூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ததுடன் அப்பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோயிலிலும் சுவேந்து அதிகாரி சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக இத்தொகுதியைத் தன்வசம் வைத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து, பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, 18.39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Summary
All Hindus voting for BJP: West Bengal LoP Suvendu Adhikari on second phase polling
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
மமதா போட்டியிடும் பவானிபூரில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்!

மேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



