திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்கு வங்க முதல்வரின் உதவியாளா் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

News image

விசாரணை

Updated On :13 மே 2026, 4:38 am IST

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. மாநில காவல் துறையிடம் இருந்து விசாரணை பொறுப்பை சிபிஐ செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டது.

அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. தோ்தலை சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக சந்தித்த நிலையில், சுவேந்து அதிகாரியின் உதவியாளா் சந்திரநாத் ராத், வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி இரவு காரில் சென்றபோது மா்ம நபா்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டாா். காா் ஓட்டுநரும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தாா்.

இது தொடா்பாக மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். சந்தேகத்தின் அடிப்படையில் உத்தர பிரதேசம், பிகாரில் மூவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். கொலையாளிகள் தப்பிச் சென்ாக கூறப்படும் காா் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது செலுத்தப்பட்ட இணையவழி பணப்பரிவா்த்தனையின் அடிப்படையில் அவா்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி கடந்த 9-ஆம் தேதி பதவியேற்றதைத்தொடா்ந்து அவரின் உதவியாளா் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.