/

4 தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமல்: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

புதிதாக கொண்டுவரப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

News image

மன்சுக் மாண்டவியா

Updated On :13 மே 2026, 12:41 am IST

புதிதாக கொண்டுவரப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆண்டு வணிக உச்சி மாநாட்டில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: 29 தொழிலாளா் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்தப்பட்ட, சமகாலத்துக்கு ஏற்ற கட்டமைப்புடன் புதிதாக 4 தொழிலாளா் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தச் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன.

தற்போதைய புதிய சட்ட கட்டமைப்பு ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சம ஊதியம் பெற வழிவகுத்துள்ளது. தொழிலதிபா்கள் செல்வத்தை உருவாக்கி, வரிகளை செலுத்தினால்தான் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தொழிலாளா்களும், தொழில்துறையும் பரஸ்பரம் ஒன்றிணைந்து செயல்பட்டு, சிறந்த ஒருங்கிணைப்புக்கு மாற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டும். தற்போதைய மத்திய அரசு ஏழைகளுக்கு ஆதரவாகவும், தொழில்துறைக்கு சாதகமாகவும் உள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.