தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முன்னாள் முதல்வர் வாழ்த்து!

தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார்.

News image

தமிழக முதல்வர் விஜய் / கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் - X

Updated On :10 மே 2026, 6:21 pm IST

தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார்.

கேரளத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வென்றது. 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வென்றது. மேலும், பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, கேரள முதல்வராகப் பதவி வகித்த பினராயி விஜயன் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று புதிதாக ஆட்சியமைத்துள்ள தமிழக முதல்வர் விஜய்க்கு பினராயின் விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “தமிழ்நாடு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோசப் விஜய்க்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக அமைப்பில் மக்கள் வழங்கும் தீர்ப்பு மிகப் பெரிய பொறுப்பாகும். தமிழ்நாட்டு மக்கள் தங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் மக்கள்நலன் ஆகிய மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் ஆட்சியாக உருவாகும் என நம்புகிறேன்.

கேரளமும் தமிழ்நாடும் நீண்டகால நட்பும் ஒத்துழைப்பும் பகிர்ந்து வரும் மாநிலங்களாகும். கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், இரு மாநில மக்களும் இணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Former Kerala Chief Minister Congratulates Tamil Nadu Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.