திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ்

கார்கே - ராகுல் கையில் கேரள முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம்...

News image

ராகுல் - கார்கே - ANI

Updated On :9 மே 2026, 8:15 pm IST

புது தில்லி : கேரள முதல்வர் நாற்காலி யாருக்கு? என்பதில் ஏற்பட்ட குழப்பத்துக்கு விடை காண தில்லியில் இன்று(மே 9) காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் கேரளத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்கள் சந்திப்பு நடைபெற்றது.

140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மட்டும் 63 இடங்களில் வென்றது.

கேரளத்தின் அடுத்த முதல்வராக கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசனை தோ்வு செய்ய வேண்டும் என்பதே கட்சித் தொண்டா்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், கட்சி எம்எல்ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபாலுக்கு உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, முதல்வரை இறுதி செய்வதற்கு முன்பாக, வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால் ஆகிய மூவரையும் காா்கே இன்று(மே 9) அழைத்து தனித்தனியாகப் பேசினார் என்று தகவலறிந்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனா்.

தில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில், தில்லியில் கார்கேவுடனான இன்றைய சந்திப்பில் கேரள முதல்வர் தேர்வில் சுமுக முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கட்சி மேலிடம் எடுக்க கேரளத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஆதரவளித்து தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Summary

Who will be the Chief Minister of Kerala? Kharge and Rahul will consult and announce the final decision: Congress.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.