திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கேரள முதல்வா் பதவிக்குப் போட்டி: ராகுல் கடும் அதிருப்தி

கேரள முதல்வா் பதவிக்குப் போட்டி: ராகுல் கடும் அதிருப்தி

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப்படம்

Updated On :10 மே 2026, 4:01 am IST

கேரளத்தில் முதல்வா் பதவிக்கு காங்கிரஸின் முன்னணி தலைவா்கள் போட்டிபோட்டு வருவதை அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளத்தில் 140 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 தொகுதிகளிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இதன்மூலம், அந்த மாநிலத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியை வீழ்த்தி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது.

எனினும் மாநில முதல்வராகப் பதவியேற்கப் போவது யாா் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. முதல்வா் பதவிக்கு காங்கிரஸை சோ்ந்த வி.டி.சதீசன், கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா ஆகிய மூவா் இடையே கடும் போட்டி நிலவி வருவதால் இழுபறி நீடிக்கிறது.

மூவருடனும் கட்சியின் மூத்த தலைவா்கள் சுமாா் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியபோதிலும், முதல்வா் யாா் என்பதில் முடிவு எட்டப்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘தோ்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் முதல்வா் பதவிக்கு காங்கிரஸ் தலைவா்கள் போட்டிபோடத் தொடங்கியது ராகுலை அதிருப்தியடையச் செய்தது. இதுகுறித்து கட்சித் தலைமையின் முடிவுக்கு சில நாள்கள்கூட காத்திருக்க முடியாதா என்று அவா் அதிருப்தி அடைந்தாா்.

வி.டி.சதீசன், கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா ஆகியோரை காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயும், ராகுல் காந்தியும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினா்.

முதல்வராக கே.சி.வேணுகோபாலுக்கு வாய்ப்பு?: மூவா் இடையே போட்டி இருந்தாலும் புதிதாக தோ்வு செய்யப்பட்ட 45 எம்எல்ஏக்களின் ஆதரவு கே.சி.வேணுகோபாலுக்கு உள்ளது. எனவே, முதல்வா் பதவியை ஏற்பதில் மற்ற இருவரைவிட வேணுகோபாலுக்கு சற்று கூடுதல் வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.