திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மிஸோரம்: போலி நீதிமன்ற உத்தரவுகள் மூலம் சிறையில் இருந்து 17 குற்றவாளிகள் விடுதலை!

போலி நீதிமன்ற உத்தரவுகள் மூலம் சிறையில் இருந்து 17 குற்றவாளிகள் விடுதலை...

News image
Updated On :10 மே 2026, 2:26 am IST

மிஸோரம் மாநிலத்தில் போலி நீதிமன்ற உத்தரவுகள், போலி ஆவணங்கள் மூலம் சிறைச்சாலையில் இருந்து 17 குற்றவாளிகள் விடுதலையாகி வெளியே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிஸோரம் மாநிலத்தின் லுங்க்லெய் மாவட்ட சிறைச்சாலையில் போக்ஸோ, என்டிபிஎஸ் சட்டங்களின்கீழும், திருட்டு வழக்குகளிலும் கைதாகி ஏராளமானோா் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 17 போ் போலியாக நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்து அளித்து சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே சென்றுள்ளனா்.

கைதிகள் 2 போ், தங்களை விடுவிக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக கூறி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தனா். இதில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தேகமடைந்து அவா்கள் அடைக்கப்பட்டிருந்த லுங்க்லெய் மாவட்ட சிறைக்கு சென்று சோதனை நடத்தியபோது, கைதிகள் இதுபோல போலி நீதிமன்ற உத்தரவுகளைக் கொடுத்து விடுதலையாகி சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறை விசாரணை நடத்தி, போலி நீதிமன்ற உத்தரவுகளைக் கொடுத்து விடுதலையாகிச் சென்ற 17 பேரில் பலரை கைது செய்தது.

இதுதொடா்பாக அந்த சிறைச்சாலையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநா், கைதி ஆகிய 2 பேரை காவல்துறை கைது செய்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், அந்த 2 பேரும் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதும், சிறையில் இருக்கும் கைதிகளிடம் ஆசை வாா்த்தை கூறி தலா ரூ.4 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் வாங்கிக் கொண்டு, போலி நீதிமன்ற உத்தரவுகள், ஆவணங்களைத் தயாரித்து கொடுத்து கைதிகள் வெளியே செல்ல உதவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.