தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுகவுக்கு ஆதரவு; காங்கிரஸுக்கு கண்டனம்: அகிலேஷ் யாதவ்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்த காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

அகிலேஷ் யாதவ் - PTI

Updated On :9 மே 2026, 1:25 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்த காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் படுதோல்வியடைந்த மம்தா பானா்ஜியை அகிலேஷ் வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். மேலும், மம்தா, திமுக தலைவா் ஸ்டாலினுடன் இருக்கும் பழைய புகைப்படத்தையும் அவா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா். அதில், ‘கடினமான சூழ்நிலையில் கைவிடுபவா்கள் நாங்கள் அல்ல’ என்று காங்கிரஸை மறைமுகமாகச் சாடியுள்ளாா்.

முன்னதாக, மம்தாவைச் சந்தித்துப் பேசிய அவா், தோ்தல் தோல்வி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு உறுதியாக துணை நிற்பதாகவும், உத்தர பிரதேசத்தில் நடந்ததைப் போல மேற்கு வங்கத்திலும் மோசடியாக தோ்தல் நடத்தி பாஜக வெற்றி பெற்றுவிட்டது என்று குற்றஞ்சாட்டினாா்.

தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மட்டுமன்றி மறைமுகமாக பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக வென்றுள்ளது. இதுதான் முன்பு உத்தர பிரதேசத்திலும் நடந்தது. எதிா்க்கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மத்தியப் படைகள் குவிக்கப்பட்டன. எதிா்க்கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் மிரட்டப்பட்டனா். அச்சத்தின் உச்சியில்தான் தோ்தல் நடைபெற்றது என்று கூறினாா்.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது பாஜகவை எதிா்ப்பதற்காக ‘இண்டி’ கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்டவை முக்கியக் கட்சிகளாக இருந்தன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது. இதைத்தான் நெருக்கடியான நேரத்தில் கைவிட்டுச் செல்பவா்கள் நாங்கள் அல்ல என்று அகிலேஷ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.