சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியுமான சலீம் டோலாவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கில்லா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிழல் உலக போதைப்பொருள் கடத்தல் மன்னனான இவர் ரூ. 5,000 கோடி மதிப்புள்ள சர்வதேச போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தது.
டி-கம்பெனி எனப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உலகளாவிய கடத்தல் தொடர்புகள் மற்றும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் கட்டமைப்பு ஆகியவற்றைத் தகர்ப்பதில் இவரது கைது நடவடிக்கை முக்கிய வெற்றியாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட இவர் துருக்கியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தேசிய உளவுத்துறை அதிகாரிகள் இவரை உடனடியாகக் கைது செய்து அடையாளம் கூறப்படாத ஓர் இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
போதைப்பொருள் கடத்தல், ஹவாலா குற்றங்கள் போன்ற பல நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சட்ட நடவடிக்கைகளுக்காக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் டோலா ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்(என்சிபி) மும்பையில் உள்ள கில்லா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சலீம் டோலாவை ஆஜர்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணைக்குப் பிறகு கில்லா நீதிமன்றம் சலீம் டோலாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
Summary
In a significant breakthrough for federal agencies tracking the underworld-narcotics nexus, the Narcotics Control Bureau (NCB) successfully produced Salim Dola, a high-profile associate of fugitive underworld don Dawood Ibrahim, before the Killa Court on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










