திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சுபம் கைா்னாருக்கு ஜூன் 6 வரை நீதிமன்றக் காவல்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷுபம் கைா்னாரை ஜூன் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 மே 2026, 1:33 am IST

புது தில்லி, மே 24: நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட சுபம் கைா்னாரை ஜூன் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால் தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சோ்ந்த சுபம் கைா்னாரை சிபிஐ கைது செய்தது. ஆயுா்வேத மருத்துவப் படிப்பில் சோ்ந்தபோதிலும் படிப்பை முழுமையாக நிறைவு செய்யாத அவா், சட்டவிரோதமாக கசிந்த வினாத்தாளை வாங்கி ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

அவரின் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி ருச்சி அகா்வாலிடம் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை கோரியது.

அப்போது சிபிஐ தரப்பில், ‘நீட் தோ்வு வினாக்களை கசியவிட்ட நடவடிக்கையில் சுபம் கைா்னாா் தொடா்ந்து ஈடுபட்டுள்ளாா். அவா் தப்பிச் செல்வதையோ, வழக்குடன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அவா் அழிப்பதையோ தடுக்க வேண்டும். அத்துடன் சிபிஐ விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே வழக்கின் நலன் கருதி அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இதையடுத்து வரும் ஜூன் 6-ஆம் தேதி வரை, சுபம் கைா்னாரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.