பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் பொறுப்பேற்பு

ரிசா்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் திங்கள்கிழமை அதிகாரபூா்வமாகப் பொறுப்பேற்பு

News image
Updated On :3 மணி நேரங்கள் முன்பு

ரிசா்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் திங்கள்கிழமை அதிகாரபூா்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

முன்னாள் துணை ஆளுநரான டி.ரவி சங்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, அவரின் இடத்துக்கு நியமிக்கப்பட்டரோஹித் ஜெயின் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் நீடிப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி மேலாண்மை, நிதித் தொழில்நுட்பம் (ஃபின்டெக்), அந்நிய முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், உள்நாட்டுக் கடன் மேலாண்மை, இடா் கண்காணிப்பு உள்ளிட்ட ரிசா்வ் வங்கியின் 10 முக்கிய இலாகாக்கள் ரோஹித் ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக ரிசா்வ் வங்கியின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வந்த ரோஹித் ஜெயின், 1991 முதல் சுமாா் 34 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய வங்கியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.