மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி வாகை சூடிய நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டது.
பர்தமான் மாவட்டத்திற்குட்பட்ட ஜமுரியா மற்றும் அன்சோல் ஆகிய பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் அலுவகத்தை முற்றுகையிட்டு பொருள்களை வெளியே எடுத்து வீசி தீயிட்டு எரித்தனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த பாதுகாப்புப் படை வீரர்கள், திரிணமூல் அலுவலகத்தை சூறையாடிய நபர்களை விரட்டி அடித்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியதால், பாதுகாப்புக்காக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. பாஜக 207, திரிணமூல் காங்கிரஸ் 80, காங்கிரஸ் 2, இதர கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு மையங்களில் வன்முறை நேரிட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை சில இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. சில இடங்களில் வன்முறை நடக்கும்போதே வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்தன. இதில் பல ஆயிரம் வாக்குகள் திருடப்பட்டதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பெரும்பான்மை பெற்று பாஜக வெற்றி பெற்ற நிலையில், திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்களைக் குறிவைத்து பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். திரிணமூல் தொண்டர்களும் பதில் தாக்குதல் நடத்தியதால் மோதல் அதிகரித்தது.
இதனிடையே திரிணமூல் ஜமுரியா மற்றும் அன்சோல் பகுதியில் திரிணமூல் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி சூறையாடினர். நாற்காலிகளை வெளியே எடுத்து வீசி உடைத்தனர். அலுவலகத்தில் இருந்த பொருள்களை வெளியே எடுத்து வீசி தீயிட்டு எரித்தனர். வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இது தொடர்பான விடியோவை திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
Summary
TMC office vandalised in Asansol; items set ablaze
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் திரிணமூல் - பாஜக இடையே கடும் போட்டி! யார் முன்னிலை?

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை



